காமராஜரும் மோடியும் ஒரே சிந்தனை உடையவர்களாம்- வெங்கய்யா நாயுடு

காமராஜரின் 113 வதுபிறந்த தின விழா விருதுநகரில் கொண்டாடப்பட் டது. ஒரு குறிப்பிட்ட சாதி அமைப்பினர், இவ்விழா விற்கு பாஜக அகில இந்திய தலைவர் அமித்ஷா வை பங்கேற்க அழைப்பு விடுத்திருந் தனர். திடீரென அமித்ஷா பங்கேற்கவில்லை.

அவருக்கு பதிலாக மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு விழாவில் பங்கேற்று உரையாற்றுவார் என பாஜக அறிவித்தது. இதற்கான ஏற்பாடுகள் விருது நகர் கே.வி.எஸ்.மேல்நிலைப்பள்ளி மைதானத் தில் செய்யப்பட்டிருந்தன. அதில் கலந்து கொண்டு பேசிய வெங்கய்யா நாயுடு,துவக்கத்தில் காமராஜரை வானளாவிய அளவில் புகழ்ந்து தள்ளினார்.
அப்போது கூட்டத்தில் இருந்து ஏக கைத் தட்டல்கள் விழுந்த வண்ணம் இருந்தன. நேரம் போகப் போக, அவர் வழக்கமான சரடுவிடும் பாணியை கையாளஆரம்பித்தார். காமரா ஜரும், மோடியும் ஒரே சிந்தனை உடையவர்கள் என்றார். அப்போது பேச்சைக்கேட்டவர்கள் மௌனமா கினர். வெங்கய்யா மேலும் பேச ஆரம்பித்தார்.

காம ராஜரும் ஏழை குடும்பத்தில் பிறந்தவர். மோடியும் ஏழைக் குடும்பத்தில் பிறந் தவர் என்றார். பின்பு, காமராஜர் முதல்வராக இருந்துஅகில இந்திய தலைவரா னார். மோடியும் முதலமைச்சராக இருந்து பிரதமரான வர் என்றார். மோடி பல்லவியை பாடிக் கொண்டே இருந் தார். இதனால், கூட்டம் வேகமாக குறைந்தது. அடுத்து ஆடிட்டர் குருமூர்த்தி பேசுவார் என அறிவித்தனர். அப்போது, ஆளைவிட்டால் போதுமடாசாமி என கூட்டம் கலையத் துவங்கியது.

இதை யடுத்து, மேடையில் இருந்த ஒருவர், மைக்கில், தயவு செய்து குருமூர்த்தியின் பேச்சைக் கேட்டு விட்டுச் செல்லுங்கள் என காலில் விழாத குறையாக கூவினார். அதற்கு எந்த பலனும் கிட்டவில்லை. இறுதியாக குருமூர்த்தி, மிச்ச சொச்சம் இருந்த பாஜகவினரிடம் மட்டுமே பேச வேண்டியதாயிற்று.

நோக்கம்

காமராஜரை, தில்லியில் அன்றைக்கு ஆர்எஸ்எஸ் வெறியர்கள் உயிரோடு எரித்துக் கொல்ல முயற்சி செய்தார்களே, அங்கிருந்த அவரது வீட்டையும் சூறையாடினார்களே. உண்மை இவ்வாறு இருக்க காமரா ஜர் பிறந்த நாள் விழாவுக்கு, பாஜக தலைவர்களை ஏன் அழைக்கின்றீர்கள்? என விழா நடத்துபவர்களிடம் சில செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள்.அதற்கு அவர்கள் கூறியபதில் மிகவும் அதிர்ச்சி யளிப்பதாக இருந்தது. “எங்களது மதிப்பை உயர்த்த வேண்டுமெனில் இது போன்ற நிகழ்ச்சிகளில் ஆளும் கட்சி தலைவர்களை பங்கேற்கச் செய்தால் மற்றவர்களுக்கு பயமும் மரியா தையும் ஏற்படும். எனவே, அழைத்தோம்“ என சமா தானம் கூறினர்.மொத்தத்தில் சாதிய வாதிகளும், மதவாதிகளும் சேர்ந்து தன்னலமற்ற ஒரு அரசியல் தலைவரான காமராஜரை அவரது பிறந்த நாள் விழா என்ற பெயரில் மாபெரும் களங்கத்தை ஏற்படுத்தி விட்டனர் என்பது மக்களின் கருத்தாக இருந்தது

காமராஜர்  முதல்வராக இருந்த போது தன் அம்மாவை கூட தன் உடன் தங்க அனுமத்திக்கமாட்டாராம். அந்த அளவுக்கு நேர்மையான மனிதர். அவர் எங்கே மோடி எங்கே காலகொடுமை ?.....


தொகுப்பு
செல்வன்

உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்

Comments

அவர்க்கு படிக்காத மேதையைப் பற்றி ஒன்றும் தெரியவில்லை போலும்...