போப்பாண்டவர் கம்யூனிஸ்ட்டா?

கிறிஸ்தவர்களின் தலைமை குருவான போப்பிரான்ஸிஸ்
ஓரு கம்யூனிஸ்ட் என ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாளேடுகள்  அவரை விமர்சித்து வருகின்றன.அண்மைக் காலத்தில் முதலாளித்துவம் குறித்து போப் பிரான்சிஸ் கடுமையாக விமர்சனம் செய்து வரும் பின்னணியில், சிலர் அவரை மார்க்சிஸ்ட் என்றும்  முத்திரை குத்தி வருகின்றனர். அந்தப் பின்னணியில், ரோம் நகரிலிருந்து வெளிவரும் இல் மெஸ்ஸாஜரோ ஏட்டிற்கு அவர் பேட்டி அளித்துள்ளார். அதில் அவரிடம் எழுப்பப்பட்ட சில கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போது, கம்யூனிஸ்ட்டுகள் உள்ள டக்கத்தில் கிறிஸ்தவர்களே என்று பொருள்படக் கூறியுள்ளார். போப்பாண்டவர் “லெனி னிஸ்ட் போன்று பேசுகிறார்” என்று எக்கனாமிஸ்ட் ஏட்டின் இணைய தள விமர்சனம் ஒன்றிற் குப் பதிலளிக்கையில், “ என்ன செய்வது? எங்கள் கொடியை கம்யூனிஸ்டுகள் களவாடிச் சென்று விட்டார்கள் என்று தான் நான் சொல்ல முடியும்.
அந்தக் கொடி ஏழை மக்களின் கொடி. நற்செய்தியின் (பைபிள்) மையப் பொருளே, ஏழ்மை குறித்தது தான்” என்றார். வறிய வர்கள், நோயாளிகள், வாழ்க்கை வசதியின்றித் திண்டாடுபவர்கள் ஆகியோர் குறித்து பைபிளிலிருந்து பல மேற்கோள்களைக் காட்டி னார். “இவையெல்லாம் தான் கம்யூனிசம் என கம்யூனிஸ்டுகள் கூறுகிறார்கள். கிறிஸ்து பிறந்து இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் அவர்கள் இப்படிக் கூறும்போது, அவர்களைப் பார்த்து, அப்படியானால், நீங் களும் கிறிஸ்தவர்கள் தான் என்று நாம் திருப்பிக் கூற வேண்டியது தான்” என்று சிரித்துக் கொண்டே கூறினார். 2013 மார்ச் மாதம் தேர்ந் தெடுக்கப்பட்ட நாள் முதல், போப் பிரான்சிஸ் உலகப் பொருளாதார அமைப்பு குறித்து கடுமையாக கண்டனம் செய்து வருகிறார்.
முதலாளித்துவம், ஏழை-எளிய மக்களை பெருமளவு உதாசீனம் செய்கிறது என்றும் கூறி வரு கிறார். ஜூன் மாதத்தின் துவக்கத்தில், நிதி மூலதனத்தின் ஊக நடவடிக் கைகள், குறிப்பாக, பண்டகச் சந்தையில் நடைபெறும் முன்பேர வர்த்தகம், ஏழை மக்களின் உணவுப் பாதுகாப்பிற்கு எதிரான மோசடி எனக் கூறியிருந்தார். இந்தப் பின்னணியில் தான் அவர் “மார்க்சிஸ்ட்”, “லெனினிஸ்ட்” என்றெல்லாம் குற்றச்சாட்டிற்கு ஆளாகி வருகிறார்.

தொகுப்பு
செல்வன்

உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்


Comments

Unknown said…
#முதலாளித்துவம், ஏழை-எளிய மக்களை பெருமளவு உதாசீனம் செய்கிறது#போப் சொல்வதிலும் உண்மை இருக்கிறதே !
Unknown said…
#முதலாளித்துவம், ஏழை-எளிய மக்களை பெருமளவு உதாசீனம் செய்கிறது#
போப் சொல்வதிலும் உண்மை இருக்கே !