கேப்டன் விஜயகாந்திடம் ஒரு கேள்வி

பாஜக-வோடு தேமுதிக கூட்டுச் சேர்ந்தது ஏன்? தேமுதிக தலைவர் விஜய காந்த், “ஊழலை ஒழிக்க தமிழ கத்தில் நான் இருக்கிறேன். இந்தியா விற்கு ஒருவர் வேண்டும் அல்லவா? இதற்கு நரேந்திர மோடியை பிரதமராக தேர்ந்தெடுக்க வேண் டும்,” என்று பேசி வருகிறார்.‘ரமணா’ திரைப்படத்தில், ஊழல்க ளுக்கு எதிராகக் கிளம்பும் கதாநாயக னாக நடித்தவர் ‘கேப்டன்’.
இப்போது இப்படிப் பேசுவதால் பாஜக-வின் ஊழல் கறை யாருக்கும் நினைவுக்கு வராது என்று அவர் நினைத்திருக்கலாம். அப்படி மறக்கக் கூடியதல்ல பாஜக ஊழல்கள்.ஊழல் செய் வதில் காங்கி ரஸ் பாரம் பரியத்துக்கு பாஜக கொஞ்சமும் சளைத்த தல்ல, இளைத் ததல்ல.
இதை ‘ஊழல் ஒழிப்பு’ மாநாடு நடத் திய விஜய காந்த் தெரிந்து கொண்டாக வேண்டும்.2001ல் பாஜகவின் தலைவராக இருந்தவர் பங்காரு லட்சு மண். இவர், கையூட்டாக ஒரு லட்சம் ரூபாய் வாங்கி யதை ரகசிய மாக ஒளிப் பதிவு செய்யப்பட்ட காட்சியை தொலைக் காட்சியில் கோடானு கோடி மக்கள் பார்த்து அதிர்ச்சி யடைந் தனர்.
அவர் குற்றவாளி என்று நீதிமன்றத்தால் அறிவிக்கப் பட்டு, திகார் சிறையில் அடைக்கப்பட் டார்.“சட்ட விரோதமாக சுரங்கத் தொழில் நடத்துவது குறித்து நாங்கள் விடுத்த எச்சரிக்கையை (கர்நாடக முதலமைச் சராக இருந்த எடியூரப்பா) பொருட்ப டுத்தவில்லை. இதனால்தான் அவ ருக்கு இந்த கதிஏற்பட்டது. இதனால் ஊழல் பிடியிலிருந்து பாஜக-வும் தப்பவில்லை,” என்று 2011 அக்டோபர் 11ல் நாக்பூரில் நடந்த ரத யாத்திரைக் கூட்டத்தில் ஒருவர் புலம்பினார். அவர் வேறு யாருமல்ல, பாஜகவின் மூத்த தலைவர் எல்.கே. அத்வானி.
சட்டவிரோதமாக கனிமச் சுரங்கத் தொழில் நடத்தி கோடிக் கணக்கில் பணம் கொள்ளையடித்து வந்ததோடு, அந்தத் தொழில் தொடர்பான வன்முறை களிலும் செழித்திருந்தவர்கள் ரெட்டி சகோதரர்கள். அவர்கள் இரண்டு பேருமே கர்நாடக பாஜக அரசில் அமைச்சர்களாக இருந்த னர். “பாரத் மாதா கி ஜே” என்று உரக்க முழங்கும் சங்பரிவார உறுப்பினர்கள், பாரத மாதாவைப் பாதுகாப்பதற்காக கார்கில் எல்லையில் நடந்த போரில் மரணமடைந்த இந்திய ராணுவ வீரர்க ளுக்காக சவப்பெட்டிகள் வாங்கப்பட் டதில் நடத்திய ஊழல் பற்றி தேமுதிக கேள்விப்பட்டதில்லையா? நிற்க, குஜராத் மாடல் வளர்ச்சி என்கிறார்களே, அந்த வளர்ச்சி உண்மையில் ஊழலின் வளர்ச்சிதான்.
உதாரணமாக, நிலச்சீர்திருத்தம் என்ற பெயரில் அரசு கையகப்படுத்திய 15,587 ஏக்கர் உபரி நிலங்கள், உண்மையிலேயே நிலம் தேவைப்படுகிற நிலமற்ற விவசா யிகளுக்கோ, வீட்டு மனை கோரிய வீடற்றவர்களுக்கோ முறையாகப் பகிர்ந் தளிக்க வில்லை.
நிர்வாகத்தை மேம்படுத்தவும், நில ஆவணங்கள் தொடர்பான விவரங்க ளைப் புதுப்பிக்கவும் அளிக்கப்பட்ட ரூ.71.8 கோடியை குஜராத் வருவாய்த்துறை பயன்படுத்தவே இல்லை. அப்படிப் புதுப்பித்தால் முறை கேடான பதிவுக ளுக்கு இடைஞ்சல் என்பதுதான் காரணமா?“விதிமுறைகள், வழிகாட்டு நெறி முறை களைப் பின்பற்றுவதில் குஜராத் அரசின் செயல்பாடு திருப்தி கரமாக இல்லை. தன்னாட்சி பெற்ற இரண்டு நிறுவனங்க ளின் கணக்கு கள் கடந்த 4 ஆண்டுகளா கத் தாக்கல் செய்யப் படவே இல் லை.முறையான விளையாட்டுக் கொள்கை வகுக்கப் பட வில்லை. பயி ற்சி யாளர்கள் அனைவரும் நிர்வாகப் பணி களில் ஈடுப டுத்தப்பட் டுள்ளனர். பெரும்பாலான விளையாட்டு விடுதிகள் செயல் பாட்டில் இல்லை.குடிநீர்க் கொள்கையும் சரியாக வரை யறுக்கப்பட வில்லை. தேசிய நதி நீர்ப் பாதுகாப்புத் திட்டம் எந்தவிதமான ஆய் வையும் மேற் கொள்ளாமல் அமல்படுத் தப்பட்டுள்ளது.

குறிப்பாக நதியில் கலக்கும் மாசு குறித்து ஆய்வு மேற்கொள் ளப் படவில்லை. சபர்மதி நதி தூய்மைப் படுத் தும் திட்டத்தை முறையாகக் கண் காணிக்கவில்லை...”-இதையெல்லாம் சொல்லியிருப்பது பத்திரிகைகளோ, எதிர்க்கட்சிகளோ அல்ல. குஜராத் சட்டப் பேரவையில் (மறைக்க முடியாமல்) 2012 ஏப்ரலில் தாக்கல் செய்யப்பட்ட தலைமைக் கணக் குத் தணிக்கையாளர் அறிக்கை யில் (சிஏஜி) இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
ஆம், எந்த சிஏஜி-யின் அறிக்கைகளை அடிப் படையாக வைத்து மத்திய காங்கி ரஸ் கூட்டணி அரசின் ஊழல்களைப் பற்றி பாஜக ஆவேசமாகப் பேசுகிறதோ, அதே சிஏஜி-யின் அறிக்கையில்தான் மோடி அரசின் இந்த முறைகேடுகளும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன. குஜராத் தில், மோடி ஆட்சியில், 17 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் ஊழல் நடந்திருப்பதை யும் சிஏஜி அறிக்கை அம்பலப்படுத்தியி ருக்கிறது.
‘ரமணா’ சாருக்கு கோபம் வர வேண் டாமா?தமிழகத்தில் தானும், இந்திய அள வில் மோடியும் ஊழலை ஒழிக்கப் புறப் பட்டு விட்டதாக விஜயகாந்த் பேசி வரு கிறார். அதன் அர்த்தம் என்ன? குஜராத் மாடல் ஊழல் வளர்ச்சி அகில இந்திய அளவில் நிகழ்த்தப்படுவதையும், தமிழ கத்தில் அதே போல் நிகழ்த்தப்படுவதை யும்தான் நீங்கள் விரும்புவதாக அர்த்தமா கேப்டன் அவர் களே?

-சி. ஸ்ரீராமுலு


உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்


Comments

அனைத்தையும் நகைச்சுவையாக எடுத்துக் கொள்ள வேண்டும்... கேள்வி எல்லாம் கேட்கப்பாடாது - by "கேப்டன்"