இனம் டீஸர் + சந்தோஷ்சிவன் தகவல்

கன்னத்தில் முத்தமிட்டால் துவங்கி இலங்கையை களமாக கொண்டு பல படங்கள் வந்து விட்டன. இயக்கனரும், ஒளிப்பதிவாளருமான சந்தோஷ்சிவன் தற்போது இனம் என்ற பெயரில் இலங்கையை மையமாக கொண்டு திரைப்படம் தயாரித்திருக்கிறார். உருமி போன்ற இந்திய விடுதலை போர் பற்றிய படத்தை உண்மை சம்பவங்ளை மையமாக கொண்டு எடுத்தவர் . ஒளிப்பதிவும் பிரமாதமாக இருக்கும்...
இனம் படத்தைப் பற்றி இயக்குனர் சந்தோஷ் சிவன் கூறும்போது,

“நான் என் நண்பர் ஒருவர் வீட்டிற்கு மதிய உணவுக்கு சென்றிருந்தேன். அங்கு இலங்கை பாரம்பரிய உணவுகளை தயார் செய்திருந்தார்கள். யார் இதையெல்லாம் செய்தார்கள் என்று கேட்டதற்கு

ஒரு பெண்தான் இந்த உணவையெல்லாம் செய்தார் என்று கூறினார். அந்த பெண்ணை நான் பார்த்தேன், அவர் எதுவும் பேசவில்லை. ஆனால் அந்த பெண்ணின் கண்களில் ஒரு கதை தெரிந்தது. விசாரித்தபோது அவர் இலங்கை அகதி என்பது தெரிந்தது. ஒரு அகதி அங்கு இருந்து இங்கு வந்து எப்படி இருக்கிறார், என்ன ஆச்சு, என்று பல கேள்விகள் என்னுள் எழுந்து என் மனசே கேட்கவில்லை. அதுதான் ‘இனம்’ படம் உருவாக காரணமாக இருந்தது
இப்படத்திற்கான ஆய்வு 3, 4 வருடமாக நடந்தது. ஒரு அகதியை வைத்துதான் கதைக்களத்தை அமைக்க வேண்டும் என்று எனக்கு தோன்றியது.

    

ஆதரவற்றவர்களை மையமாக வைத்து கதை உருவாக்கப்பட்டுள்ளது. பல ஆதரவற்றவர்கள் ஒன்று கூடி ஒரு குடும்பமாக செயல்படுகிறார்கள். இவற்றின் பின்னணியில் கதை நகரும். மகாராஷ்டிரா, கேரளா, திருநெல்வேலி, இலங்கை உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றது.
இப்படம் ஆங்கிலத்தில் 'சிலோன்' என்ற பெயரிலும் தமிழில் ‘இனம்’ என்ற பெயரிலும் வெளிவர உள்ளது” என்றார்.

          சந்தோஷ்சிவனின் உருமி பதிவுகள்

          1. உருமி ஸ்டில்கள் + பாடல் வீடியோ

          2. தமிழ்நாட்டுக்கும்- தமிழக மக்களுக்கும் நன்றி - ''உருமி'' பிருதிவிராஜ்

தொகுப்பு செல்வன்


உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்


Comments

படம் சிறப்பாக இருக்கும் என்பதில் சந்தேகமேயில்லை...