ஷாங்காய் படவிழாவிற்கு செல்லும் கமலின் பேசும் படம்


கமல் ஹாஸன் நடிப்பில் வெளியான புகழ்பெற்ற பேசும் படம் திரைப்படம் சீனாவின் ஷாங்காய் திரைப்பட விழாவுக்குப் போகிறது..25 வருடங்களுக்கு முன் வெளிவந்த படம். கடந்த 1988-ம் ஆண்டு வெளியானது. கமல் ஹாஸனுடன் அமலா நடித்திருந்தார். சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கியிருந்தார்.படத்தில் காதாபாத்திரங்களுக்கு வசனம் கிடையாது. பிண்ணனி இசைமட்டுமே உண்டு. படத்தில் யாரும் பேசாவிட்டாலும் கூட படம் பேசும். சைகையிலேயே பேசி காதல் செய்யும் கமல்,அமலா, அரை டம்ளர் டீ கிளாஸில் நாணயங்களை போட்டு கிளாஸ் நிறைந்ததும் குடிக்கும் கமல்,

ஜஸ் கத்திகளை வைத்து கொலைசெய்ய அலையும் வில்லன்கள் என படத்தின் காதாபாத்திரங்களுக்கு வசனம் தேவைப்படமலேயே  நகைசுவையாக காட்சியை அமைத்திருப்பார்கள். இந்தப் படம் இந்தியில் புஷ்பக் என்ற பெயரிலும், தெலுங்கில் புஷ்பக விமானம் என்றும் வெளியானது    அன்றைக்கு அனைத்துத் தரப்பினரின் பாராட்டையும் குவித்தது பேசும் படம். வெளியாகி 25 ஆண்டுகள் கழித்து இப்போது ஷாங்காய் திரைப்பட விழாவில் இந்தப் படம் திரையிடப்படுகிறது.கால் நூற்றாண்டு கழித்தும் பேசும் அளவுக்கு தரத்தில் சிறந்த படமாக பேசும் படம் திகழ்வதைத்தான் இது காட்டுகிறது
  

தொகுப்பு 
செல்வன்

உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்

Comments

தகவல்களுக்கு நன்றி...
  • பாலியல் கொடூரத்தில் தலைநகரமும்- தமிழ்நாடும்
    24.12.2012 - 3 Comments
    இந்தியாவுக்கு செல்லும் அமெரிக்க பெண்கள் தனியாக செல்லவேண்டாம் என உலக நாடுகள் எச்சரிக்கும் அளவுக்கு…
  •   அமேசான் கிண்டிலில் எனது நூல்கள்
    16.10.2021 - 0 Comments
       அமேசான் கிண்டிலில் எனது நூல்கள் வாங்கவிருமாண்டியின் மரபணுநூலை வாங்க  இங்கே  கிளிக்…
  •  பொக்கிஷத்தை பாதுகாத்து வரும் வால்முளைத்த மர்ம மனிதர்கள்
    05.09.2016 - 3 Comments
    700ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டு பாழடைந்து கிடக்கும் பழமை வாய்ந்த ஈஸ்வரன் கோவிலின் உள்ளே கீழ் நோக்கி…
  • 7ம் அறிவு திரைப்பட புதிய புகைப்படங்கள்
    25.10.2011 - 1 Comments
    படங்கள் - tamilwire.com எந்திரனை தொட்டுவிட்ட 7ம் அறிவு 1600க்கும் மேற்பட்ட பிரிண்டுகள்,தமிழகத்தில்…
  • இப்போதுதான் கள்ளநோட்டு புழக்கம் அதிகமாகி விட்டது!
    24.04.2018 - 0 Comments
    பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின்னர்தான், கள்ள ரூபாய் நோட்டுகளின் புழக்கம் அதிகரித்துள்ளதாக மோடி அரசின்…