இரவு ஓன்றுக்கு 590 டாலர் ....


ஏழு இரவுகள் 10,920 டாலர்கள் ....,ஒரு நபருக்கு ஓரிரவுக்கு ரூ.22 ஆயிரம் .....,சொகுசு கேபினுக்கு ஓரிரவுக்கு 1600 டாலர்கள் ....., இருவர்  8,050 டாலர்கள் ,இவையெல்லாம்  இந்தியாவில்  ஓடுகிற ரயில்களின் கட்டணங்கள். சொகுசு ரயில்கள் என்று சொல்லப்டுகிற அரண்மையை தண்டவாளத்தில் அமைத்து வசதியானவர்கள் மட்டும் செல்ல முடிகிற ரயில்கள். .... ரயில் பயண அனுபவம் என்பது ஒரு தனி வாழ்க்கை. தினசரி அலுவலகத்திற்கு ரயிலில் செல்பவர்களை கேட்டால் சொல்லுவார்கள். நீண்டதூர பயணங்களில் புதிய ,புதிய அனுபவங்கள்.. மேற்கண்ட கட்டணங்களை பார்த்தாலே தெரியும் சாமானியகள் நெருங்க முடியாது என்பது...

இந்தியாவில் ரயில் பயணம் தொடங்கி 160ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. ஆனாலும் இந்திய ரயில்வே மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதிலும், அவர்களுக்கு பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்வதிலும் வெகுதூரம் பயணிக்க வேண்டியுள்ளது. ஆனாலும் இந்திய ரயில்வே செல்வந்தர்களின், வெளிநாட்டவர்களின் திருப்தியான பயணத்தில் தீவிரமான கரிசனம் காட்டுகிறது. ‘மகத்தான இந்தியா’(ஐசூஊசுநுனுஐக்ஷடுநு ஐசூனுஐஹ) என்ற முழக்கத்துடன் மத்திய - மாநில சுற்றுலா துறையும், ரயில்வே துறையும், இணைந்து நடத்திவரும் சுற்றுலா ரயில்களில் பயணம் செய்வது குறித்து சாமானிய இந்தியன் கனவு காணக்கூட முடியாது. ஆம் ஆத்மிகளின் அரசு என்று கூறிக்கொள்வோர் அவர்களைப் பற்றிக் கவலைப்படுவதும் இல்லை. சாமானியர்கள் நெருங்க முடியாத ரயில்கள் பற்றி சில விவரங்கள் கீழே தரப்பட்டுள்ளன.

பேலஸ் ஆன் வீல்ஸ்


உலகின் மிகச்சிறந்த பத்து சொகுசு ரயில்களில் இதுவும் ஒன்று. அரண்மனையின் வசதிகள் நிறைந்த இந்த ரயிலில் குளிரூட்டப்பட்ட பத்து சொகுசு பெட்டிகள் உள்ளன. இவற்றில் உலகத்தரம் வாய்ந்த வசதிகள் செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு பெட்டியிலும் சிற்றுண்டிகள் தயாரிப்பதற்கான சமையலறைகள் இணைக்கப்பட்டுள்ளன. ஓய்வெடுப்பதற்கான வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு பெட்டியிலும் இருபடுக்கைகள் கொண்ட மாளிகை போன்ற நான்கு பிரிவுகள் உள்ளன. அவற்றில் இசை, இணையதளம்,இணைக்கப்பட்ட கழிவறைகள், குளியலறை, தரைவிரிப்புகள் உள்ளிட்ட பல வசதிகள் செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு பெட்டியிலும் காண்டினெண்டல், சைனீஸ், இந்தியா, ராஜஸ்தானி வகை உணவு தயாரித்து வழங்கும் உணவுக்கூடங்கள் உள்ளன.

இந்த ரயிலில் ஏழு இரவுகள் பயணிக்க ஓவ்வொரு பிரிவுக்கும் மூவர் பகிர்ந்து கொள்வதென்றால் 10,920 டாலர்கள் கட்ட வேண்டும். இருவர் பயணிக்க 8,050 டாலர்கள் கட்ட வேண்டும். ஒருவர் மட்டும் பயணிக்க 5,390 டாலர்கள் செலுத்த வேண்டும்.

ராஜஸ்தான் ராயல் ஆன் வீல்ஸ்

ராஜஸ்தானில் ஏழு நாட்கள் பயணிக்கும் சொகுசு ரயில் இது. புதுதில்லியில் இருந்து புறப்படும் இந்த ரயிலில் பயணம் செய்ய இருவர் பயணிக்கும் சொகுசு கேபினுக்கு இரவு ஒன்றுக்கு 590 டாலர்கள் கட்ட வேண்டும். ஒருவர் தங்கும் சொகுசு கேபினுக்கு 825 டாலர்கள் கட்ட வேண்டும். அதிநவீன சொகுசு கேபினுக்கு ஓரிரவுக்கு 1600 டாலர்கள் கட்ட வேண்டும். ராஜஸ்தானில் உள்ள முன்னாள் சமஸ்தானங்களான ஜோத்பூர், உதய்பூர், சித்தூர், ஸ்வாய் மாதோபூர், ஜெய்ப்பூர் ஆகிய நகரங்களுக்கு சென்று சுற்றிப்பார்க்கலாம். ராஜஸ்தானில் இருந்து திரும்பும் வழியில் இந்த ரயில் கஜூராஹோ, வாரணாசி, ஆக்ரா ஆகிய ஊர்களுக்கும் சென்ற பின் தில்லி திரும்பும். இந்த ரயிலின் பெட்டிகளில் வை-பை இணையதளம், செயற்கைகோள் தொலைக்காட்சி, இசைப்பெட்டிகள், உணவுக்கூடங்கள் ஆகிய வசதிகள் இணைக்கப்பட்டுள்ளன.

கோல்டன் சேரியட்

இந்த ரயிலை கர்நாடகா அரசின் சுற்றுலாதுறை நடத்துகிறது. அக்டோபர் முதல் மார்ச் வரை இந்த ரயில் நடத்தப்படும். ஏழு இரவுகளும், எட்டு நாட்களும் கொண்ட சுற்றுப்பயணம் இது. பெங்களூருவில் தொடங்கும் இந்தப்பயணம் கபினி, ஸ்ரீரங்கப்பட்டினா, மைசூர், சிரவண்பெலகோலா, பேலூர், ஹலேபீட், ஹம்பி, பதாமி, பட்டாடகல், கோவா கடற்கரை வரை செல்கிறது. ஒரு நபருக்கு ஓரிரவுக்கு ரூ.22 ஆயிரம் கட்டவேண்டும். இருவர் சேர்ந்து பயணம் செய்தால் ஓரிரவுக்கு ஒருவருக்கு ரூ.16,500ம், மூவர் சேர்ந்து பயணம் செய்தால் ஓரிரவுக்கு ஒருவருக்கு ரூ.13,200ம் செலுத்த வேண்டும். இத்திட்டத்திற்கு பிரைட் ஆப் சௌத் என்று பெயர். சதர்ன் ஸ்பிளண்டர் என்று மற்றொரு திட்டமும் செயல்பட்டு வருகிறது.அதன் கட்டணங்களும் மேற்கூறிய முறையில் ரூ.26,400, 19,800, 16,500 ஆகும்.

இவை ஒரு சில உதாரணங்களே. மேலே கூறப்பட்ட ரயில்கள் தவிர டெக்கான் ஒடிசி, மகாராஜா எக்ஸ்பிரஸ், தி இந்தியன் ஸ்பிளண்டர், பேரி குவீன் ஆகிய பகட்டு மற்றும் சொகுசு சுற்றுலா ரயில்களும் இயக்கப்படுகின்றன. டெக்கான் ஒடிசி மகாராஷ்டிராவை சுற்றிப் பயணிக்கிறது. மகாராஜா எக்ஸ்பிரஸை இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிஸம் நிறுவனம் நடத்துகிறது. இந்த ரயில் ஆக்ரா, படேபூர் சிக்ரி, ஜெய்ப்பூர் ஜந்தர்மந்தர், கஜூராஹோ உள்ளிட்ட மத்தியப் பிரதேச சுற்றுலா தலங்களுக்கு செல்கிறது. ராந்தம்போர் புலிகள் சரணாலயத்துக்கும் இது செல்கிறது.நாம் இந்த ரயில்ல போக முடியாது தெரிந்தாவது வைச்சுகிறுவோம்.

- தொகுப்பு செல்வன்


உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்

Comments

ஐயோ சாமீ...! வாழ்க பாரதம்...!
உலகின் மிகச்சிறந்த பத்து சொகுசு ரயில்களில் இதுவும் ஒன்று. அரண்மனையின் வசதிகள் நிறைந்த இந்த ரயிலில் குளிரூட்டப்பட்ட பத்து சொகுசு பெட்டிகள் உள்ளன. இவற்றில் உலகத்தரம் வாய்ந்த வசதிகள் செய்யப்பட்டுள்ளன.//

ஆஹா இப்பவே பயணம் போக ஆசையா இருக்கே....