இயக்குனராக வேண்டும் என்பது என் கனவு நடிகர் ஜெயம் ரவி


ஜெயம், சந்தோஷ் சுப்ரமணியம் என அண்ணனின் கைப்பிடித்து பத்திரமாக நடந்து வந்த நடிகர் ஜெயம் ரவி முதன்முறையாக பேராண்மை என்ற படத்தின் மூலம் தடம் மாறினார். அன்றிலிருந்து இன்று வரை அவரது தடம் வித்தியாசப்பட்டே வந்து கொண்டிருக்கிறது.அமீரின் ‘ஆதிபகவன்’, புதுமுக இயக்குனரின் ‘பூலோகம்’, சமுத்திரக் கனியின் ‘நிமிர்ந்து நில்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார் ஜெயம் ரவி. இவையனைத்தும் அதிரடிப் படங்கள். ஆனால் ஒவ்வொன்றும் வித்தியாசமானவை. பருத்தி வீரன் படத்திற்குப் பிறகு திரைப்பட தயாரிப்பாளர்களுடன் ஏற்பட்ட பிரச்சனையைக் கடந்து அமீர் ஆதிபகவன் படத்தை இயக்கி வந்தார். இந்தப் படத்தில் ஜெயம் ரவி நடத்தி வருகிறார். படத்தின் அனைத்து காட்சிகளும் முடிவடைந்துள்ள நிலையில் சில காட்சிகள் மட்டுமே படமாக்கப்பட்ட வேண்டியுள்ளது. இதே சமயத்தில் மற்ற படங்களின் படப்பிடிப்பும் தொடர்ந்து நடைபெற்றது.

இந்தப் படங்களுக்காக மெனக்கெட்டு வருகிறார் ஜெயம் ரவி. அவர் தெரிவித்துள்ளதாவது,என்னைவிட என்மேல இயக்குனர்களுக்கு நல்ல நம்பிக்கை இருக்கிறது. கமல் சாரின்ஆளந்வந்தான் படத்தில் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா சாரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தேன். படப்பில் கலந்து கொண்ட போது, இயக்கத்தை விட நடிப்பு எனக்கு மிக அருகில் இருப்பது போல் தோன்றியது. இதன்பிறகே எனது பாதையை நடிப்பின் பக்கம் திருப்பேன். உதவி இயக்குனரா இருந்த நான் இன்று இந்தளவிற்கு வந்ததற்குக் காரணம் இயக்குனர்கள் என் மேல வைத்திருந்த நம்பிக்கைதான். அவர்களுக்கு நன்றி சொல்லனும். சினிமாவிற்கு வந்து 10 வருடங்கள் ஆகிவிட்டன. இன்னும் கத்துக்கிட்டே இருக்கேன்.

இதுவரை ரொம்க் கொஞ்சம் தான் கத்திருக்கேன். இன்னும் நிறைய கத்துக்கணும். சினிமா ஆட்களைப் பத்தி புரிஞ்சிக்கேட்டே வரேன். ஒவ்வொரு படத்திற்காகவும் என்னை இம்ப்ரூவ் பன்னிக்கிட்டே வரேன். பூலோகம் படத்தில் முதன்முறையாக இரண்டு வேடங்களில் நடிக்கிறேன். இதில் 40 வயதைத் தாண்டிய பாத்திரம் ஒன்றில் நடக்கிறேன். இது புதுசா இருக்கு.கடந்த ஆண்டு நான் நடித்த எந்த படங்களும் வரலை. ஆனால், இந்த ஆண்டி வெளிவரவுள்ள படங்களுக்காக கடுமையாக உழைத்துள்ளேன். இந்த ஆண்டு நமக்கு சிறப்பான ஆண்டாக இருக்கும். தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தி வந்தாலும், இயக்குனராக வேண்டும் என்பது என கனவு. என் மனசுக்குள் ஒரு கதை இருக்கு. அதற்கு ஜீவா தான் பொருத்தமாக இருப்பார். இதனை அவரிடம் சொல்லி வைத்திருக்கேன் என்றார்.
 -செல்வன்

உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்

Comments