பரமக்குடி t0 ஹாலிவுட் வரை - கமல்


புதிதுபுதிதாக ஏதாவது செய்தாக வேண்டும் என யோசிப்பவர்களுக்கு கமலை பிடிக்காமல் இருக்காது. தமிழ் சினிமா என்ற  தேரை கோடம்பாக்கத்திலிருந்து ஹாலிவுட் வரை இழுத்துச்சென்றவர்.

எழுத்தாளர் மணா எழுதிய கமல் நம் காலத்து நாயகன் நூலிருந்து சில தகவல்களை கமலின் பிறந்தநாள் ( நவ.7) பதிவில் தொகுத்துள்ளேன்....

கமல் நம் காலத்து நாயகன் நூலில் கமலின் அண்ணன் சந்திரஹாசன் பேட்டி மூலமாக பரமக்குடியிலிருந்து அவரது சினிமா உலகம் ஹாலிவுட்  வரை நிறைய தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன.


வென் ஆஸ்கர்?’னு திருப்பித் தந்தியடிச்சார். ..


கட்டபொம்மன் டயலாக் சொல்வார். எம்.ஜி.ஆரோடமதுரை வீரனைக் கிட்டத்தட்ட நூறு தடவைக்கு மேல பார்த்திருப்பார். எங்க அப்பா 'கட்டபொம் மன் டயலாக் சொல்லுடா’னு சொன்னார்னா, உடனே 'திரை வட்டி, மஞ்சள் அரைத்துப் பணி செய்தாயா’ அப்படினு டயலாக் சொல்வார். இங்கே இருந்து அங்கே தவ்வி, அங்கே இருந்து இங்கே தவ்வினு எம்.ஜி.ஆர். மாதிரி ஸ்டன்ட் பண்ணிட்டு இருப்பார். அந்தச் சமயத்துல இவர் நடிகர் ஆவார்னுலாம் நான் நினைக் கலை!

ஆனா, எங்க அப்பா நினைச்சார். பன்னெண்டு வயசுல கமல் சார் படிப்பை நிறுத்தினப்ப, எனக்கும் அவருக்கும் ஆர்க்யூமென்ட். 'நீ படிக்கணும். கிராஜுவேட் ஆயிரு. அப்புறம் சினிமாவில் ஆக்ட் பண்ணு’னு நான் சொன்னேன். அப்போ எங்க அப்பா சொன்னார், 'அவன் நடிகன் ஆகட்டும்டா. இவன் என்ன பண்ணுவான். பி.ஏ. பாஸ் பண்ணிட்டு எம்.ஏ., பாஸ் பண்ணிட்டு, ஐ.ஏ.எஸ். ஆகி தமிழ்நாட்டுல ஏதோ ஒரு சின்ன டிஸ்ட்ரிக்ட்ல பேர் தெரியாத ஒரு மூலைல ஆபீஸரா இருக்கணும்கிறயா? அவன் நடிகனா வந்து உலகத்துக்கே தெரியணும்!’ கமல் சார் மேல அவருக்கு அவ்வளவு கான்ஃபிடன்ஸ்!

கமல் சாருக்கு 'மூன்றாம் பிறை’க்கு தேசிய விருது கிடைச்சிருச்சுனு அப்பாவுக்குத் தந்தியடிச்சோம். பதிலுக்கு கங்கிராஜுலேஷன்ஸ்லாம் வரலை. 'வென் ஆஸ்கர்?’னு திருப்பித் தந்தியடிச்சார். அவ்வளவு கான்ஃபிடென்ட்டா இருந்தார்.

 ஒரு ஷார்ப்னஸ் எப்பவுமே அவர்கிட்ட இருக்கும்!''

வட இந்தியாவில் முகமது ரஃபினு பாடகர். அவர் ஏவி.எம். ஸ்டுடியோவுக்கு இந்திப் பாட்டு ரிக்கார்டிங்குக்காக வந்திருந்தார். ரிக்கார்டிங்கின்போது நான் கமல் சாரைக் கூட்டிட்டுப் போய் உட்கார்த்தி வெச்சிருந்தேன். கேட்டுட்டே இருந்தார். கொஞ்ச நேரத்தில் வெளியே வந்துட்டோம். வெளியே வந்தபோது முகமது ரஃபி வந்தார். சரவணன் சார் ரஃபிகிட்ட, 'இந்தப் பையன் ஆக்ட் பண்றான்’னு சொன்னார். அவர் தட்டிக் கொடுத்துட்டு, 'கானா காவோகி... பாட்டுப் பாடுவியா?’னு கேட்டார். 'ஆங்...’ அப்படின்னுட்டுப் பாடினார்.

உள்ளே ரெக்கார்ட் பண்ணின பாடலை 'ஸ்வர் பதலே கைஸே, கைஸே கிஸ்மத் கி’னு பாடினார். அந்தப் பாட்டு உள்ளே ரெக்கார்டு பண்ணி டேப்புக்குக்கூட டிரான்ஸ்ஃபர் ஆகி இருக்கலை. ஆனா, கமல் சார் முதல் ரெண்டு வரியை அற்புதமாப் பாடிக் காண்பித்தார். ரஃபி சார் ரொம்ப இம்ப்ரெஸ் ஆகிட்டார். அந்த மாதிரி ஒரு ஷார்ப்னஸ் எப்பவுமே அவர்கிட்ட இருக்கும்!''

'வாசல்ல பிச்சை எடுக்க பிச்சைக்காரர் வந்திருக்கார்’ 

கமல் சார் யாரையும் நீன்னோ, அவன்னோ சொல்ல மாட்டார். 'அவர் வந்திருக்கார்’, 'இவர் வந்திருக்கார்’னுதான் சொல்வார். அது எப்படி ஆச்சுனு பார்த்தா, அவர் சின்னப் பிள்ளையா இருக்கும்போது பெரிய நடிகர் ஒருவரைப் பார்த்து 'அங்கே பார்... அவன் வர்றான் பார்’ அப்படினு சொன்னார் என்கிட்ட. 'அவர் வர்றார்’னு சொல்லுனு சொன்னேன். வீட்டுக்கு வந்த அப்புறம், 'வாசல்ல பிச்சை எடுக்க பிச்சைக்காரர் வந்திருக்கார்’ அப்படினு ஆரம்பிச்சு, இப்ப வரை அந்த மரியாதை யைத் தக்கவெச்சிருக்கார்.

டோட்டல் இன்வால்வ்மென்ட் 

'சாகர்’னு ஒரு இந்திப் படம். அதுல ஒரு பெரிய டிரம்ல ஏறி நடிக்கணும். அதைப் படுக்கப்போட்டா, எட்டடி உயரம் இருக்கும். அதுல ஏறி உருண்டுட்டே சண்டைபோடுற மாதிரியான காட்சி. வீட்டு வாசல்ல அதே மாதிரி மரத்தால் பண்ணச் சொல்லி பதினஞ்சு நாள் இவர் பிராக்டீஸ் பண்ணிட்டுப் போனார். இவர்கூட நடிச்சவரால அதில் ஏறி நிக்கக்கூட முடியலை. பேலன்ஸ் பண்ண முடியலை. எதைச் செய்யணும்னாலும் அதுக்குனு பிரிப்பேர் பண்ணுவார். எவ்வளவு சின்ன விஷயமா இருந்தாலும் டோட்டல் இன்வால்வ்மென்ட் இல்லாம அதில் ஈடுபடவே மாட்டார்.

எல்லாமே ஹாலிடேதான்’னு 

காலைல எழுந்தா சினிமா, மத்தியானம் சாப்பாடும் சினிமா, டின்னரும் சினிமாதான்! அமெரிக்காவுக்கு ஹாலிடேக்குப் போறேன் அப்படிம்பார். போயிட்டு வந்த பிறகு, ஹாலிடே எல்லாம் எப்படிப் போச்சுனு கேட்டா... 'நடிப்புக்காக ஒரு கோர்ஸ் அட்டென்ட் பண்ணேன். சினிமா பட்ஜெட் பண்றதுன்னு ஒரு கோர்ஸ் பண்ணேன். மேக்கப் ஸ்பெஷலிஸ்ட் இருந்தார். அவரைப் பார்த்தேன்’னு அடுக்குவார். ஏங்க ஹாலிடேவுக்குப் போறேன்னு சொன்னீங்களேனு கேட்டா, 'இதுதான் எனக்கு ஹாலிடே. இங்கே இருந்து அங்கே போனா ஹாலிடே. அங்கே இருந்து இங்கே வந்தா ஹாலிடே. எல்லாமே ஹாலிடேதான்’னு சொல்வார்!


கல்யாண மண்டபம் இல்லாத நடிகர் 

கமல் 50’ விழாவுக்கு விஜய் டி.வி. இவர்கிட்ட அனுமதி வாங்கிட்டாங்க. உடனே, மத்த சேனல்லாம் வந்து, 'சார், எங்களை விட்டுட்டீங்களே’னு கேட்டாங்க. அப்போ நான், '75 வருஷத்துக்கு வேணும்னா, இப்பவே அக்ரிமென்ட் போட்டுக்கங்க. லேட்டா வந்தா, அப்புறம் 100-க்குத்தான் போடணும்’னு சொன்னேன். ஏன்னா, இவர் சாதனை பண்ணாத வருஷமே இருக்கப்போறது இல்லை. ஏதாவது பண்ணிட்டே இருப்பார். திஸ் இஸ் வாட் ஹி டூ. ஹி இஸ் பெஸ்ட் அட் இட்
ரிவார்டு வருதானு பார்த்து எதையும் அவர் செய்யலை. ரிவார்டு எதிர்பார்த்துச் செய்திருந்தா, பல கல்யாண மண்டபங்கள் வந்திருக்கும். கல்யாண மண்டபம் இல்லாத நடிகர் இவர் ஒருவர்தான்னு கிண்டலுக்குச் சொல்வாங்க. சினிமாதான் அவருக்கு வாழ்க்கை!

சினிமா ரசிகர்கள் கலைதாகம் கொண்ட நடிகனுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லாமே..
தொகுப்பு 
சத்யஜித்ரே


உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்

Comments

kiliyooraan said…
he is the only one actor in the world.
அருமையான தொகுப்பு நண்பரே...
சிறப்பான நடிகரைப் பற்றி சிறப்பான பகிர்வு...

நன்றி...