துப்பாக்கியில் - பஞ்ச் வசனங்களுக்கு அவசியம் இல்லை. நடிகர் விஜய் பேட்டி


விஜய் நடித்த ‘துப்பாக்கி’ படம்  இன்று ரிலீசாகியுள்ளது.. இப்படம் குறித்து விஜய் அளித்த பேட்டி

‘துப்பாக்கி’ படத்தில்  புதிய கெட்டப்பில் வருகிறேன். மும்பையில் படமாக்கப்பட்டு உள்ளது. ஏ.ஆர்.முருகதாஸ் கைவண்ணத்தில் ஸ்டைலிஸ் படமாக தயாராகியுள்ளது
‘துப்பாக்கி’ முழுக்க, முழுக்க முருகதாஸ் படம். கதை பிரமாதமாக உள்ளது. அதனால்தான் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன். அதிக நாட்கள் எடுத்து வேலை செய்தார். படம் பிரமாதமாக வந்துள்ளது.
இந்த படத்தில் பஞ்ச் வசனங்களுக்கு அவசியம் இல்லை.
காரணம் படமே பஞ்ச் தான். காமெடிக்கு சத்யன் இருக்கிறார். எனக்கும், கதாநாயகி காஜல் அகர்வாலுக்கும் இடையிலான காதல் காட்சிகளில் அவருடைய காமெடி அசாதாரணமாக அமைந்துள்ளது. பாடல்கள் ஹிட்டாகியுள்ளன.
படத்தில் எல்லா பாடல்களுமே நன்றாக வந்துள்ளன.
‘அலைக்கா லைக்கா‘, ‘கூகுள் கூகுள்‘ பாடல்கள் எனக்கு மிகவும் பிடித்த பாடல்கள் ஆகும். ஆரம்பத்தில் நான் நடித்த படங்களில் காஸ்ட்யூமில் கவனம் செலுத்தவில்லை. ஆனால் ‘போக்கிரி’ படத்துக்கு பிறகு நான் அணியும் ஆடைகள் பற்றி தனிப்பட்ட முறையில் எனக்கு அக்கறை வந்துள்ளது.
‘துப்பாக்கி’ படத்தில் ஒவ்வொரு பிரேமிலும் நான் சிறப்பாக தெரியும்படி காஸ்ட்யூம்கள் வடிவமைக்கப்பட்டது. எதிர்காலத்தில் வித்தியாசமான கேரக்டர்களில் நடிக்க ஆர்வம் உள்ளது. சிறந்த இயக்குனர்கள் படங்களிலும் நடிக்க விரும்புகிறேன். இம்மாதம் இறுதியில் ஏ.எல்.விஜய் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளேன்
-சத்யஜித்ரே

உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்

Comments