விஸ்வரூபம் புதிய புகைப்படங்கள்

100 சதவீதம் அக்மார்க் கமல் பாணி படம் என்பதால் படத்திற்கு எதிர்பார்ப்புகள் அதிகமாகிக் கொண்டிருக்கின்றன. கமல்ஹாசன் தவிர பூஜா குமார், ஆண்ட்ரியா, ராகுல் போஸ் உள்ளிட்டோரும் இப்படத்தில் நடித்துள்ளனர்.

இந்த நிலையில் விஸ்வரூபம் படத்தின் முதல் வெள்ளோட்டம் (டிரைலர்)  சிங்கப்பூரில் வெளியிடப்பட்டது.
இவ்விழாவில் திரையுலக பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர். முதல் வெள்ளோட்டத்தில் கமலஹாசன் மாறுபட்ட நடிப்பு, உடல் மொழியை வெளிப்படுத்திய காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
ஹாலிவுட் படம் அளவுக்கு வெள்ளோட்டம் அமைந்திருந்தது. இதனால் ஹாலிவுட் வரையிலும் அவரது இந்தப் படம் செல்லும் என்பதில் ஐயமில்லை.





மேலும், விஸ்வரூபம் முதல் முறையாக உலகப் பார்வையாளர்களுக்கு காட்சிப்படுத்தப்படுகிறது. அதன்படி சிங்கப்பூரில்  3 நாட்கள் நடைபெறவுள்ள 13-வது சர்வதேச இந்திய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் வி்ஸ்வரூபம் திரையிடப்படவுள்ளது.
சிங்கப்பூர் லயன் சிட்டியில் நடைபெறும் இந்த விழாவில் கமலஹாசன் பங்கேற்கிறார். அவருடன் நடிகைகள் ராதிகா, ஷ்ரேயா, இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்டோரும் கலந்து கொள்கின்றனர். பிரபுதேவாவின் சிறப்பு நடனமும் விழாவில் இடம் பெறுகிறது.
வெள்ளோட்டம் வெளியானதைத் தொடர்ந்து, விரைவில் இசையை வெளியீடு செய்துவிட்டு, ஆகஸ்ட் மாதம் இப்படத்தை திரைக்குக் கொண்டுவர முடிவு செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 
- சத்யஜித்ரே

உங்கள் கருத்துக்களை எழுத ....
ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும்  select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்

Comments

MARI The Great said…
பகிர்வுக்கு நன்றி ..!
படங்களைப் பார்க்கும் போது விஸ்வரூபம் எப்போது வரும் என்று ஆவலாயிருக்கிறது. கமல்ஹாசனின் கதக் நடனத்தைக் காணவும் ஆர்வமாயிருக்கிறேன். பகிர்விற்கு நன்றி.
  • கருவாடும் - சுடுகாடும்
    15.01.2012 - 0 Comments
    ஏய் மீனவ நண்பா வாழ்க்கையென்னும் கடலை நீந்திக் கரை சேர்ந்தவன் வெற்றியாளன்.... ஆனால்…
  • காந்தி படுகொலை ... ஆவணங்களை எரிக்க பா.ஜ.க. முயற்சி
    14.07.2014 - 2 Comments
    ஜூன் 23 அன்று பிடிஐ செய்தி நிறுவனம் ஒரு செய்தியை வெளியிட்டிருந்தது. அதன்படி, “பிரதமர் நரேந்திர மோடியின்…
  • எறும்புகள் பத்தி நடிகர் அமிதாப் சொன்ன தகவல்...
    15.05.2013 - 2 Comments
    ஒரு நடிகர் எறும்புகள் பத்தி என்ன பெருசா சொல்லபோறார். அதுவும் இந்தியாவின் சூப்பர் ஸ்டாராக இருந்தவர்…
  • கேரள அரசுக்கு ஆப்பு வைக்கும் ''அணை 555''
    31.12.2011 - 3 Comments
    முல்லைப்பெரியாறு தமிழ்நாடு கேரள மக்களிடயே பெரும் பிரச்சனையாக உருவெடுத்த காரணங்களில் முக்கியமானது டேம் 999…
  • தமிழில் பேசும் படத்திற்கு வயது 80
    02.11.2011 - 0 Comments
    தமிழகத்திற்கு இன்றைய நேற்றைய முதல்வர்களை கொடுத்தது சினிமாதான். ஏன், நாளைய முதல்வர்களை தமிழ்சினிமா உருவாக்கி…