அரசியலுக்கும், எனக்கும் சம்பந்தம் இல்லை- உதயநிதி ஸ்டாலின் பேட்டி


சினிமா தயாரிப்பாளரும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின் அவர் நடித்த ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் 50-வது நாள் விழாவில் பங்கேற்றார். தஞ்சை, கும்பகோணம் கல்வி மாவட்டத்தில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ - மாணவிகளுக்கு உதயநிதி ஸ்டாலின் பரிசுகள் வழங்கினார்.
மேலும் தமிழில் முதல் இடத்தை பிடித்த 6 மாணவ - மாணவிகளுக்கும் பரிசுகளை வழங்கினார். பின்னர் உதயநிதி ஸ்டாலின் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறியதாவது:-


சீர்திருந்த படங்களுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுப்பேன். புகை பிடிக்கும் காட்சி, புகையிலை பயன்படுத்தும் காட்சியில் நடிக்க மாட்டேன். வித்தியாசமான கதை அம்சம் உள்ள படங்களில் நடிக்க முயற்சி செய்வேன்.
ஜனரஞ்சகமான, காமெடி படங்களுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுப்பேன். ஒரு கல், ஒரு கண்ணாடி படத்தில் எனது நடிப்பில் தவறு இருந்தால் சுட்டிக் காட்டலாம். வித்தியாசமான ஆக்ஷன் படங்களில் நடிப்பேன். வித்தியாசமான வில்லன் ரோலிலும் நடிக்க ஆசைப்படுகிறேன்.
எனக்கு எல்லா டைரக்டர்களும் பிடிக்கும். ஆனாலும் ராஜேஷ் படத்தில் மீண்டும் நடிக்க ஆசைப்படுகிறேன். சந்தானத்துடன் கூட்டணி மீண்டும் தொடரும். நடிகர் வடிவேல் நல்ல நண்பர். அவருடன் சேர்ந்த நடிக்க  விரும்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

உதயநிதி ஸ்டாலினிடம் உங்களுக்கு தி.மு.க. வில் இளைஞர் அணி பொறுப்பு வழங்கப்படும் என்ற பேச்சு அடிபட்டதே என நிருபர்கள் கேட்டனர். 

அதற்கு அவர் பதில் கூறியதாவது:-
பத்திரிகைகளில் தான் அவ்வாறு எழுதுகிறார்கள். அரசியலுக்கும், எனக்கும் சம்பந்தம் இல்லை. நடிப்பில் கவனம் செலுத்தவே விரும்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்
-சத்யஜித்ரே
உங்கள் கருத்துக்களை எழுத ....
ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்

Comments