கடந்த 160 ஆண்டுகளில், 2012 ஆம் ஆண்டுதான் மிகவும் சூடான ஆண்டாக இருக்கும்- வானிலை ஆய்வாளர்கள் தகவல்


குளிர் ஓரளவு குறைந்து அதனால் பாதிக்கப்பட்டு வந்தவர்கள் ஓரளவு பெருமூச்சு விட்டுக் கொள்ளும் நிலை உருவாகியுள்ளது. ஆனால், எதிர் கொள்ள விருக்கும் கோடைக்
காலம் பற்றிய செய்தி குறைந்த குளிரிலேயே நம்மை உறையச் செய்கிறது. கடந்த 160 ஆண்டுகளில், 2012 ஆம் ஆண்டுதான் மிகவும் சூடான ஆண்டாக இருக்கப் போகிறது. 2011 ஆம் ஆண்டைவிட இது சூடாக இருக்கப்போகிறது.
அதிக வெப்பமான ஆண்டுகள் பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் 2011 ஆம் ஆண்டு இருக்கிறது. 1901 ஆம் ஆண்டிலிருந்து பதிவான வெப்ப அளவின்படி, 2010 ஆம் ஆண்டுதான் அதிக அளவு வெப்பமுடன் முதலிடத்தில் இருக்கிறது. சராசரி வெப்பஅளவை விட அல்லது நீண்டகால சர்வதேச சராசரியை விட 0.48 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகமாக இருக்கும் என்பது வானிலை ஆய்வாளர்களின் முகங்களில் கவலை ரேகைகளை படரச் செய்திருக்கிறது.
இதற்கு சர்வதேச வெப்பமயமாதல் நெக்கடிதான் காரணம் என்கிறார் இந்திய வானிலைத்துறையின் தலைவர் அஜித் தியாகி. தொடர்ந்து வெப்பமான சூழல்களை எதிர்கொண்டு வருவதால், 2012 ஆம் ஆண்டு குறித்த கணிப்பால் அதிர்ச்சிய டைய வேண்டிய தில்லை என்பது அவருடைய கருத்தாகும். மேலும் கடந்த ஆண்டில் வெப்பம் அதிகமாக இருந்தது என்றாலும், இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் சராசரி வெப்பமே காணப்பட்டது. இமாச்சலப் பிரதேசம், ஜம்மு மற்றும் காஷ்மீர், நாகாலாந்து, மணிப்பூர், மிசோரம் மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்களில்தான் அதிகஅளவில் வெப்பம் இருந்தது. சராசரி வெப்பத்தை விட ஒரு டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகமாக இருந்தது.


சர்வதேச அளவில் பாதிப்பை ஏற்படுத்தி வருவதாக “லா நினா”வின் தாக்கம் இந்தியாவில் நல்ல விளைவுகளை உருவாக்கியுள்ளது என்கிறார்கள் ஆய்வாளர்கள். லா நினா தாக்கம் என்பது, அட்லாண்டிக் பகுதியில் பெரும் சூறைக்காற்றுடன் கூடிய மழை பொழிவதைக் குறிக்கிறது. இந்த மழைப்பொழிவு வெப்பத்தைக் குறைக்கிறது.லா நினா உருவாகிறது என்றால் நமக்கு சாதகமான நிலை என்று நம்பலாம் என்கிறார் மூத்த ஆய்வாளர்களில் ஒருவரான ஜே.ஆர்.குல்கர்னி. அதேவேளையில், வேறு சில அம்சங்களும் இந்திய நிலையைப் பாதிக்கலாம் என்றும் அவர் குறிப்பிடுகிறார்.
ஒட்டுமொத்த 2012 ஆண்டுக்கான வெப்ப அளவு பற்றி கணிப்புகளை இந்திய விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். ஆனால், எந்த மாதத்தில் வெப்பம் உயர்கிறது என்பதைப் பொறுத்தே அதன் தாக்கம் இருக்கும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்கள். எடுத்துக்காட்டாக, மார்ச் மாதத்தில் அதிகரித்தால் கோதுமை உற்பத்தி கடுமையாகப் பாதிக்கப்படும். இது குறித்த கவலைகளைப் பகிர்ந்து கொள்ளும் இந்
திய விஞ்ஞானிகள், மார்ச் மாதத்தில் வெளியாகவிருக்கும் உலக வானிலைக் கழகத்தின் வருடாந்திர அறிக்கைக்காகக் காத்திருக்கலாம் என்கிறார்கள்.பசுமைக்குடில் வாயுக்கள் சுற்றுச்
சூழலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன. இது உயிரினச் சுழற்சி மற்றும் கடல் பகுதி ஆகியவற்றில் மீள முடியாத பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவை என்கிறார் உலக வானி
லைக் கழகத் தலைவர் மைக்கேல் ஜெர்ராடு. சர்வதேச அளவில் தட்பவெப்ப நிலை பற்றிப் பல்வேறு விபரங்கள் மற்றும் கணிப்புகள் வெளியாகி வருகின்றன.பிரிட்டன் போன்ற நாடுகள் வெளியிட்டுள்ள கணிப்புகள், அந்த நாட்டின் சூழ்நிலையை உலகளாவிய நிலைக்குப் பொருத்திப் பார்த்து வெளியிடப்பட்டவையாகும். இதை வைத்துக் கொண்டு கவலையையோ அல்லது மகிழ்ச்சியையோ மக்கள் பகிர்ந்து கொள்ள முடியாது என்கிறார்கள் இந்திய ஆய்வாளர்கள். நாட்டின் புவியியல் மற்றும் வானிலை ரீதியான ஆய்வைக் கொண்டே, 2012 ஆம் ஆண்டுக்கான உத்திகளை நாம் தயார் செய்ய வேண்டும் என்கிறார்கள் புனே வானிலை மையத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள்.பிரிட்டனைச் சேர்ந்த ஆடம் ஸ்கைப் என்பவரும் தனது நாட்டைச் சேர்ந்த மற்ற ஆய்வாளர்களின் கணிப்போடு மாறுபடுகிறார். 2011 ஆம் ஆண்டைவிட அதிக அளவு வெப்பத்தை நாம் எதிர்கொள்ள வேண்டி வந்தாலும், 2010 ஆம் ஆண்டோடு ஒப்பிடும்போது குறைவாகவே இருக்கும் என்கிறார்.
அந்த ஆண்டில் சராசரி வெப்பத்தைவிட 0.53 டிகிரி செல்சியஸ் அதிகமான அளவு வெப்பம் காணப்பட்டது.கணிப்பு தவறலாம்!
தற்போது வெளியாகி வரும் கணிப்புகள் அப்படியே பலிக்கும் என்று சொல்லிவிட முடியாது என்கிறார்கள் ஆய்வாளர்கள். நீண்டகால சராசரி என்று பலராலும் சொல்லப்படுவது 1961 முதல் 1990 ஆம் ஆண்டு வரையிலான வெப்ப அளவின் சராசரியாகும். அதேபோல், 2012 ஆம் ஆண்டுக்கான கணிப்பிலும் 0.34 முதல் 0.62 டிகிரி செல்சியஸ் வரையில் வெப்பம் அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. 0.34 டிகிரி செல்சியசை விடக்குறைவான அளவு வெப்பம் இருந்தாலும் ஆச்சரியமில்லை. மேலும், 1990 ஆம் ஆண்டில் வெப்பமயமாதல் பெரும் அளவில் உருவெடுக்காமல் இருந்த காலகட்டமாகும். அதற்கு முன்புள்ள காலகட்டத்தில் சராசரியைக் கொண்டு அளவிட்டால், இந்த அதிகரிப்பு பெரும் பாதிப்பை உருவாக்காது என்பது தான் குல்கர்னி உள்ளிட்ட பல இந்திய ஆய்வாளர்களின் கருத்தாக இருக்கிறது.

அதிக வெப்பத்தில் முதல் 13 ஆண்டுகள்

1. 2010

2. 2011

3. 2009

4. 2007

5. 2006

6. 2004

7. 2003

8. 2002

9. 2001

10.1998

11.1999

12.1958

13.1941
தகவல்- அ.தமிழ்ச்செல்வன்.
நன்றி தீக்கதிர் நாளிதழ்
உங்கள் கருத்துக்களை எழுத ....
ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்

Comments