''அரவான்'' - லொகேசன் ஓவாமலையின் வரலாற்றுத் தகவல்கள்...


தீபாவளிக்கு வெளிவரும் ''அரவான்'' திரைபடம் குறித்து அதன் இயக்குனர் வசந்தபாலன் கூறும் போது ''படபிடிப்பு தளம் தேடி இந்தியா முழுவதும் தேடி அலைந்தோம் கடைசியில் மதுரைக்கு அருகே உள்ள ஓவாமலையில் நாங்கள் எதிர்பார்த்த லொகேசன் கிடைத்தது'' என்றார்.
மதுரையைச் சுற்றியுள்ள 20க்கும் மேற்பட்ட தொல்லியல் இடங்களில் ஓவாமலை முக்கியமான ஒன்று.
தமிழக தொல்லியல் துறையால் பாதுகாக்கப்படுகிற தொல்லியல் இடமும் கூட.

இந்த மலை தமிழ்மொழியின் எழுத்துப் பரிணாமத்தையும்,பண்டைய தமிழனின் கலாச்சாரத்தையும் வெளிப்படுத்துகிறது.


மதுரை - சென்னை தேசியநெடுஞ்சாலையில் மதுரையிலிருந்து 25 கிமீ தொலைவில் அமைந்திருக்கின்ற கிராமம் மாங்குளம். இங்குள்ள மலையை கழுகுமலை அல்லது ஒவாமலை என்று அழைக்கிறார்கள்.


வானத்திலிருந்து பாறைகளை கொட்டிவைத்து போல மிகப்ªபைரிய பாறைகள் சிதறிக்கிடக்கின்றன.  இம் மலை 4 சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளது. சமணப்பள்ளியுடன் அமைந்துள்ள சமணக்குகை, 60பேர் பாடம் கற்கும் அளவிளான பரந்த சமணப்பள்ளி,5 தமிழ்பிராமி கல்வெட்டுக்கள், இக்கல்வெட்டுக்கள் மீனாட்சிபுரம் மாங்குளம் கல்வெட்டுகள் என அழைக்கப்படுகின்றன.  கி.மு.2ம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழகத்தில் கிடைத்துள்ள கல்வெட்டுகளில் மிகப்பழமையானது . இதில் வழுதி என்னும் குடிப்பெயரும்,நிகமம் என்னும் வணிகக்குழு பெயரும் உள்ளது. இக்கல்வெட்டுக்களை மயிலை சீனி.வேங்கடசாமி, சுப்பிரமணியஐயர், கிருஷ்ணசாஸ்திரி போன்ற மொழி அறிஞர்கள் படித்திருக்கிறார்கள்.


இவர்களின் ஆய்வுகளின் அடிப்படையில் மேலே உள்ள படத்தில் இருக்கிற எழுத்துக்களில்...
                 
                        கணி நந்தி ஆசிரியற்கு ஆங்கே ஏமம் ஈந் நெடுஞ்செழியன்
                        பணவன் கடலன் வழுதி கொட்டுபித்த பள்ளி.
                       
                       கணி நந்த ஆசிரியற்கு ஆன் ஏமம் ஈத்த நெடுஞ்செழியன்
                       சகலன் இளஞ்சடிகன் தந்தை சடிகன் செய்யி பள்ளி
                       
                       கணிநந்த ஆசிரியற்கு வெள் அறை நிகமத்து காவிதி
                      கழிதிகன் தந்தை அச்சுதன் பிண ஊ கொடுப்பித்தான்
                         
                      கணி நந்தி அறி கொடி ஆதன்
                         
                      சந்தரிதன் கொடுப்பித்தோன்
                         
                       வெள் அறை நிகமத்தோர் கொடியோர் - என்று இருக்கிறது.

(இவை தமிழ் வார்த்தைகளாக இருந்தாலும் புரிந்து கொள்ளமுடியவில்லை பார்த்தீர்களா?).

                     நந்தி என்னும் பெயர் கொண்ட சமணத்துறவி இங்குள்ள மலைக்குகைகளில் தங்கியிருந்தான். அவனது தலைமாணாக்கன் ஆதவன். வெள்ளறை (வெள்ளரிப்பட்டி என்னும் ஊர் கழுகு மலைக்கு அருகில் இப்போதும் உள்ளது) என்னும் ஊர்வாழ்மக்களின் வழிவந்தவர்கள் துறவு புண்டு நந்தியோடு தங்கியிருந்தனர்.
                       இவர்கள் பாதுகாப்புடன் வாழ நெடுஞ்செழியன் என்னும் பாண்டிய அரசன் உதவி புரிந்தான். தன் செயலாளுநன் கடலன்வழுதி என்பான் வழியாக அறையிறை வாரமும் , பள்ளியும்வெட்டி உதவினான். தன் சகலை சடிகன்(செழியன்) வழியாகவும் சில படுக்கைகள் அமைத்துக்கொடுத்தான்.தன் ஊர் மக்களில் பலர் அங்குத் துறவு கொண்டிருந்ததால் அச்சுதன் என்னும் வேளாண்பெருமகன் அவர்களுக்கு உணவளித்துக் காப்பாற்றி வந்தான்  என்கின்றன இங்குள்ள கல்வெட்டுக்கள்.                          
இது போன்ற சிறப்பு மிக்க இடத்தில் படப்பிடிப்பு நட்த்தபட்ட ''அரவான் ''திரைப்படம் மூலம் நமக்கு தமிழனின் சிறப்பை தெரிந்து கொள்ளும் வாய்ப்பாக  இருக்கும்

படம் 1- ஓவாமலை
படம் 2- சமணக்குகை
படம் 3- கல்வெட்டு
படம் 4- கல்வெட்டின் அச்சு தோற்றம்.


விமர்சனம் எழுத .....
ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்
- சத்யஜித்ரே

Comments

ஓவா மலை குறித்த அற்புதமான பகிர்வு. படங்களும், கல்வெட்டுத்தகவல்களும் அருமை. பகிர்விற்கு நன்றி.