28 நவ., 2016

பிரதமர் மோடியின் ‘வான்வழி’ தாக்குதல்

மோடி கருப்பு பணத்திற்கு எதிரான துல்லிய தாக்குதல் என்ற பெயரில் தன் சொந்த பணத்தை எடுக்க பாமரமக்களை பாடாய்படுத்தி வருகிறார். பெரும் கருப்பு பண முதலைகள் சல்லாபித்திருக்க ஏழைகள் மட்டுமே துயரமடைகிறார்கள். இப்போது துல்லிய தாக்குதல் அடுத்ததாக வான்வழிதாக்குதல் தொடுத்திருக்கிறார்...
ரூபாய் நோட்டுகளை முற்றாக ஒழிக்க திட்டமிட்டிருப்பதாகவும், ரொக்கமில்லா பொருளாதாரத்தை நோக்கி நாடு சென்றுகொண்டிருப்பதாகவும் பிரதமர் நரேந்திரமோடி கூறியுள்ளார்.ரூ. 500, ரூ.1000 நோட்டுக்களை செல்லாது என்று அறிவித்து நாட்டு மக்களைஇன்னலுக்குள்ளாக்கிய பிரதமர் நரேந்திரமோடி இதுகுறித்து நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்க மறுத்து வருகிறார். ஆனால் வெளியில் தனது சாதனை இதுவென்று மார்தட்டி வருகிறார்.

இந்நிலையில், மனதோடு பேசுவேன் என்ற வானொலி நிகழ்ச்சியில் ஞாயிறன்று அவர் உரையாற்றினார்.ரூ.500, ரூ.1000 நோட்டு செல்லாது என்று நவம்பர் 8 ஆம்தேதி அறிவித்ததாகவும், 50 நாட்கள் இதனால் கஷ்டம் இருக்கும் என்று தான் ஏற்கெனவே தெரிவித்ததாகவும் கூறிய அவர், இடர்களை சந்திக்கும் மக்களுக்கு தனது வாழ்த்துக் கள் உரித்தாகட்டும் என்றார்.ஜன்தன் என்ற அனைவருக்கும் வங்கிக் கணக்கு என்ற திட்டத்தை துவக்கியபோது வங்கி பணியாளர்கள் சிரமத்தை எதிர்கொண்டார்கள்.

அதேபோல இப்போதும் கஷ்டப்படுகிறார்கள்.

21 நவ., 2016

பணத்தை எங்கே தேடுவேன்?


எங்கே தேடுவேன் எங்கே தேடுவேன்? 
பணத்தை எங்கே தேடுவேன்?

 மோடி சூழ்ச்சியால் மோசம் போன பணத்தை எங்கே தேடுவேன்?

மோடி சூழ்ச்சியால் மோசம் போன பணத்தை எங்கே தேடுவேன்?

அன்றாடம் காட்சிகளை அலையவிடும் பணத்தை எங்கே தேடுவேன்?

அம்பானி அடுப்பறையில் புகைந்து விட்டாயோ?

அதானி கழிவறையில் கசங்கி விட்டாயோ?


பாஜக ஆபிசில் பதுங்கிவிட்டாயோ?

ஆர்எஸ்எஸ் ஆபிசில் அமுங்கி விட்டாயோ?

வரிசையில் நின்று மயங்கி விட்டாயோ?

வாழவழியின்றி இறந்து விட்டாயோ?

நம்பிய பேர்களை கைவிட்ட பணத்தை
எங்கே தேடுவேன்? பணத்தை எங்கே தேடுவேன்?
Related Posts Plugin for WordPress, Blogger...

புகைப்படங்களுக்கான வலைபூ